In need of immediate joining? Call 044-42178028 / +91 9884565013

வி.ஏ.ஓ மற்றும் குருப் -4 தேர்வுகளை ஒன்றிணைத்து ஒரே தேர்வினை நடத்திடவும் தேர்வுக்கான பாடத்திட்டங்களை மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையச் செயலாளர் எம்.விஜயகுமார் அறிவித்துள்ளார்

Apply Exam

”குருப்-4, வி.ஏ.ஓ தேர்வுகள் ஒன்றிணைப்பு..!”

பாடத்திட்டத்திலும் அதிரடி மாற்றம்

வி.ஏ.ஓ மற்றும் குருப் -4 தேர்வுகளை ஒன்றிணைத்து ஒரே தேர்வினை நடத்திடவும் தேர்வுக்கான பாடத்திட்டங்களை மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையச் செயலாளர் எம்.விஜயகுமார் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குருப் 4 – தேர்வில் அடங்கிய பதவிகளுக்கும் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும்.

மற்ற பதவிகளில் அந்தந்த பதவிக்கான பணிப்பயிற்சி அளிப்பது போல வி.ஏ.ஓ பணிப்பயிற்சி தனியே அளிக்கப்படுகிறது. இதனால், இதுகுறித்த பகுதி, போட்டித்தேர்வுக்கான பாடத்திட்டத்தில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கருதப்படுகிறது.

இந்த காரணங்களைக் கருத்தில் கொண்டு இந்த இரண்டு தேர்வுகளையும் பொதுவான ஒரே தேர்வாக (CCSE 4) நடத்துவதன் மூலம், தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட்டு விண்ணப்பதாரர்கள் விரும்பும் பதவியினை கலந்தாய்வு மூலம் தேர்ந்தெடுக்க வழிவகை செய்யலாம் என முடிவு செய்து அறிவிக்கை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளார்.